எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் சின்ன ஈக்காடு, தாமரைப்பாக்கம், கன்னிகைப்பேர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில்; காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு பணிகள் குறித்த சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி வீடு, வீடாக சென்று பார்வையிட்டு; ஆய்வு செய்தார்.
சிறப்பு முகாம்
பொதுமக்கள் தங்களது வீடுகள் மட்டுமில்லாமல் சுற்றியுள்ள காலி மைதானங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பொது மக்கள் வீட்டில் உள்ள தேவையில்லாத குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், டீ கப்புகள், டயர்கள் போன்றவற்றை வீட்டிற்கு வெளியே குப்பை தொட்டியில் போட வேண்டும். பொதுமக்கள் தங்களது குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளால் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் போடுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. காலியிடங்களில் குப்பைகளை போடுபவர்கள் மீது பொது சுகாதார சட்டவிதிகள் மற்றும் உள்ளாட்சித்துறை சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கூறினார்.
வீட்டில் தேக்கி வைக்கப்பட்டுள்ள குடிநீரை பாதுகாப்பாக மூடி வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரில் குளோரின் அளவினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கனார், இவ்வாய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜே.பிரபாகரன்,திருவள்ளுர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன்,வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்,மருத்துவர் பிரியாநந்தினி,சுகாதார ஆய்வாளர் ஞானசேகரன்,ஈக்காடு ஊராட்சி செயலர் சதீஷ்,ஈக்காடு கண்டிகை ஊராட்சி செயலர் ஹரிபாபு, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


