முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணப்பூரணி வனச்சுற்றுலா திட்டம் அறிமுகம் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதிகளை இயற்கை அழகுடன் சுற்றிப்பார்க்க  இன்று வண்ணப்பூரணி சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தென்னந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிரப்பரப்பை கொண்டுள்ளது. சுற்றுலாத் துறை, வனவிலங்குகள் மற்றும் வனபாதுகாப்புடன் கூடிய  சுற்றுலா அனுபவத்தை ஏற்படுத்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணப்பூரணி சுற்றுலாத் திட்டம் இன்று அறிமுகபடுத்தப்பட்டது.  சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி,தலமலை,டி.என்.பாளையம்,கேர்மாளம் ஆகிய வனப்பகுதியில் இன்று துவக்க விழா நடைபெற்றது.

சத்தியமங்கலத்தில் இருந்து வனச்சுற்றுலா செல்ல முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் இன்று தனி வேனில் ராமயனூர், கக்கராகுட்டை, பண்ணாரி, புதுவடவள்ளி வனச்சூழல் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.   நீர்வீழ்ச்சிகள், இயற்கை எழில் சூழ்ந்த மலை முகடுகள், வனக்குட்டைகள் மற்றும் வனவிலங்குகளை பார்த்து ரசித்தனர். பழங்குடி வழிகாட்டியாக செயல்பட்டு வனவருடன் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றனர். சுற்றுலா பயணிகள் வன உயிரினத் தொட்டி, வனக்குட்டைகள்,  கண்காணிப்பு கோபுரத்தில இருந்து காட்டுவிலங்குகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். சுற்றுலாவுக்கான தனிநபர் கட்டணம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டது. காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 3.30 முதல் 6.30 வரையிலும் பயணிகள் வனப்பகுதியை சுற்றிபார்க்க இயலும். சுற்றுலாவுக்கான முன்பதிவு வாரந்தோறும் வியாழக்கிழமை துவங்கி வெள்ளிக்கிழமை  மாலை நிறைவுறும்.

சுற்றுலாத் திட்டத்திற்கு முன்ஏற்பாடாக ஆசனூரில் புலி உருவத்துடன் சுற்றுலா பயணிகள் டிக்கெட் கவுன்டர் மற்றும் ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. வனச்சுற்றுலா புலிகள் காப்பக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசனூர் பங்களாத்தொட்டியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசங்கள் பொறித்த பனியன்,டி சர்ட் மற்றும் தொப்பி ஆகியவை விற்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து