அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகோற்சவ விழா தேரோட்டம் கோலாகலம்

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      திருநெல்வேலி
Achankovil therottam

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகோற்சவ விழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மகோற்சவ விழா

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் ஐயப்பன் கோவிலில் அரசராக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் மகோற்சவ விழா 11 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மகோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை  சப்பர பவனி, ஐயப்பனுக்கு சிறப்பு அபிN~கம், திருஆபரணங்கள் அணிவித்து அலங்கார தீபாராதனை, கருப்பன் துள்ளல, சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவின் 9ம் நாளான நேற்று (24ம் தேதி ) தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல மூங்கிலால் அலங்கரிக்கப்பட்ட தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளம் முழங்க நடைபெற்ற தேரோட்டத்தின் போது ஐயப்பனின் தங்கவாள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.  மேலும் கருப்பன் துள்ளலும் நடந்தது. தேர் நிலை வந்து சேர்ந்ததும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தேரோட்டத்தில் கேரள மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று (25ம் தேதி ) பம்பா ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது. நாளை ( 26ம் தேதி )மகோற்சவ விழா நிறைவு நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து