முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட வங்கிகள் ஆலோசனைக்குழுவின் சார்பில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்ட வங்கிகள் ஆலோசனைக்குழுவின் சார்பாக விழுப்புரம் வி.வி.ஆறுமுக செட்டியார் மஹாலில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,,  தலைமையில் நடைபெற்றது.முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாமில் 1348 முத்ரா பயனாளிகளுக்கு ரூ.1852 இலட்சம் கடன் உதவிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,,  வழங்கி தலைமையுரையாற்றினார்.

மத்திய அரசு கடந்த 3 வருடங்களாக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  அதில் குறிப்பாக வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் “பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா” திட்டத்தில் பணம் இல்லாமல் வங்கி கணக்கு துவக்க அறிமுகப்படுத்தியுளது.  அவ்வாறு வங்கி கணக்கு துவக்கியவர்களுக்கு ரூ.1 இலட்சம் வரை விபத்து காப்பீடும், ரூ.30,000- வரை ஆயுள் காப்பீடும் அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கு, குறிப்பாக  தங்களது வங்கி கணக்கினை 90 நாட்களுக்கு ஒரு முறையாவது ரூபே கார்டு  மூலம் வரவு செலவு செய்திருக்க வேண்டும். மேலும், “பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா” திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ.12 பிரீமியத்தின் மூலம் ரூ.2 இலட்சத்திற்கு விபத்து காப்பீடும், “பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா” திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ.330 பிரீமியத்தின் மூலம் ரூ.2 இலட்சத்திற்கு ஆயுள் காப்பீடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் “அடல் பென்ஷன் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பயன் பெறலாம்.  இவர்கள் தங்களது 61 வயது முதல் மதாமாதம் ரூ.1000- முதல் ரூ.5000- வரை பென்ஷன் பெற இயலும். மேலும், சிறு மற்றும் குறு வணிகர்கள், தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தங்களது வணிகம் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் அல்லது புதியதாக தொடங்குவதற்கும் ஏதுவாக பாரத பிரதமரின் “முத்ரா கடன் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் ரூ.50000- முதல் ரூ.10 இலட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இன்று இந்த “முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம்” நடைபெறுகிறது.  இத்திட்டத்தின் முழுப்பயனையும் நாடு அடையும் வகையில் வங்கியாளர்கள் விரைந்து மக்களுக்கு கடன் வழங்க வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,,  கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிம்ரன்ஜீத் சிங் கஹ்லான்,, துணை ஆட்சியர் (பயிற்சி) காயத்திரி சுப்பிரமணி, இந்தியன் வங்கியின் புதுச்சேரி மண்டல மேலாளர் வீரராகவன், பாரத ஸ்டேட் வங்கியின் விழுப்புரம் ரீஜினல் மேனேஜர் ஹரிதாஸ், புதுச்சேரி  வங்கி மேலாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராஜகணேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து