புத்தாண்டு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      தூத்துக்குடி
thiruchenthur murugan temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புத்தாண்டு தினத்தையட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாக்காலங்களை மிஞ்சும் வகையில் கூட்டம் திரண்டது. 

சுவாமி தரிசனம்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புத்தாண்டு தினத்தையட்டி நேற்ற அதிகாலை ஒரு மணிக்க நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனையும், அதகாலை 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி தீபாராதனை, காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், அதனை தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தது. புத்தாண்டு தினத்தையட்டி நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடி தரிசனம் செய்தனர். பலமணி நேரம் காத்திருந்த மூலவரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த சிறப்பு விரைவு தரிசனம், விரைவு தரிசனம், சிறப்பு தரிசனம், பொதுதரிசனம் என பிரத்யோக வரிசை முறையில் சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு தினத்தில் சுவாமி தரிசித்து வழிப்பட்டால் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என பக்தர்கள் தெரிவித்தனர். கோயில் வளாகத்தில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. விழாகாலங்களில் வரும் கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம் அதிகாரித்து காட்சியளித்தது. இதனால் கோயில் வளாகம் விழாக்காலம் போல களை கட்டியிருந்தது.மேலும் திருச்செந்தூர் நாழிகிணறு பஸ் ஸ்டாண்ட், சபாபதிபுரம் தெரு, நான்குரதவீதிகள், டி.பி.ரோடு, தாலுகா அலுவலக மைதானம் என எங்கு பார்த்தாலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து