குடியரசு தினவிழாவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், நடந்தது

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      கன்னியாகுமரி
kanyaumari collector

குடியரசு தினவிழாவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில்,    நடைபெற்றது.  குடியரசு தினவிழாவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், மாவட்ட  ஆட்சியர் அலுவலக  நாஞ்சில்  கூட்டரங்கில்   நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலெக்டர்  பேசியதாவது:-

ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி கடந்த ஆண்டை போல் இவ்வாண்டும் நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் முக்கிய விருந்தினர்களுக்கு போதிய அளவு இருக்கைகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். நாகர்கோவில் நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.  வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் பிறதுறைகள் மூலம், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நலத்திட்டங்கள் பெறும் பயனாளிகளை தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். விழாவில் விபத்துக்கள் ஏற்படாதவகையில், தீயணைப்புத்துறை மூலம் தீயணைப்புக்கருவிகளை தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.  பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் நடத்திட வேண்டும்.  இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட வருவாய் அலுவலர்  கண்காணிக்க வேண்டும். இவ்விழாவில் ஒவ்வொரு அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மேலும் இவ்விழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறைகளை சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   பேசினார் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ, நாகர்கோவில் கோட்டாட்சியர்  இரா.ஜானகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) மரு. பரிதாபானு,             எம்.நிஜாமுதீன் (வேளாண்மை),  ராஜாமணி (சிறு சேமிப்பு), தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  சந்திரன், உதவி இயக்குநர் (பேரூராட்சி)  மாடசாமி சுந்தர்ராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர்  தீர்த்தோஸ் (பொ), மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறை அலுவலர்  கல்யாணகுமார், வட்டாட்சியர்கள்  எம்.வி.சஜீத்,  சுரேஷ்குமார்,  குமாரதாஸ், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து