காணும் பொங்கல்: திருச்செந்தூர் கோவில்கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      திருநெல்வேலி
thiruchenthhur murugan temple crowd

திருச்செந்தூர்   சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தைப்பொங்கலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. பொங்கலன்று அதிகாலையிலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு, கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை மற்றும் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. மதியம் உச்சிகால தீபாராதனை நடைபெற்று, சுவாமி அலைவாயுகந்தபெருமான் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி   பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டாளி மடத்திற்கு வந்து, அங்கு வைத்து கணு வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ரதவீதி, சன்னதித்தெரு வழியாக திருக்கோவில் சேர்ந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் கோட்டைமணிகண்டன், இணை ஆணையர் பாரதி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.திருச்செந்தூரில் காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் வந்து குவிந்ததால், கடற்கரையே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி வ.கி.தீபு தலைமையிலான காவல்துறைனர் ஈடுபட்டிருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து