Idhayam Matrimony

ஆலாம்பாளையம் பேரூராட்சியில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் 2 புதிய சாலை மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், ஆலாம்பாளையம் பேரூராட்சியில் புதிய சாலை மேம்பாட்டு பணிகளின் தொடக்க விழா நேற்று (06.02.2018) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம்  தலைமை வகித்தார். இவ்விழாவில் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி  கலந்து கொண்டு புதிய சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

புதிய பணிகள்

நாமக்கல் மாவட்ட பேரூராட்சிகள் துறையின் சார்பில் நபார்டு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆலாம்பாளையம் பேரூராட்சி வார்டு எண்:5 க்குட்பட்ட திருச்செங்கோடு மெயின் ரோடு முதல் ஆசிரியர் காலனி வழியாக சேரன் டாக்டர் வீடு வரை ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலும், வார்டு எண்:15 க்குட்பட்ட சின்னாக்கவுண்டம் பாளையம் சுடுகாடு முதல் காந்திநகர் பொதுபணித் துறை வாய்க்கால் வரை ரூ.70.00 இலட்சம் என மொத்தம் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் 2 புதிய சாலை மேம்பாட்டு பணிகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி  தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வி.சி.மாலதி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எம்.என்.முருகன், பேரூராட்சிகள் துறை உதவி செயற்பொறியாளர் இரா.ஜெகதீஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் தி;ரு.எஸ்.பாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பி.ராஜேந்திரன், குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் ரகுநாதன், ஆலாம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் எம்.இளங்கோ, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.கே.சுப்பிரமணியம், பள்ளிபாளையம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.செந்தில், அரசு வழக்கறிஞர் எல்.சந்திரசேகரன், ஆலாம்பாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் தனசேகர், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமகிருஷ்ணராஜ், வி.சிட்டிபாபு உட்பட அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து