கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், வரலாற்றுத்துறை மாணவ, மாணவியர்க்கு கல்வெட்டு பயிற்சி

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், கடந்த 5 முதல் நேற்று வரை மூன்று நாட்கள், போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த 50  வரலாற்றுத்துறை மாணவ, மாணவியர்க்கு, குறுகில கால கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

கல்வெட்டு பயிற்சி

முதல் நாளில் அருங்காட்சியக  காப்பாட்சியர் கோவிந்தராஜ், இந்தியாவில் எழுத்து தோன்றியது, அந்த எழுத்துக்கும் தமிழ்நாட்டு எழுத்துக்கும் உள்ள தொடர்பு ஆகிவற்றைக் குறித்து மாணவ, மாணவியர்க்கு விளக்கம் அளித்தார். இரண்டாம் நாளில், தமிழ் பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்தாகவும், தமிழாகவும் பிரிந்து எழுத்துக்கள் வளர்ந்த விதம் பற்றியும், கிரந்த எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பற்றியும் பயிற்சி அளித்தார். மூன்றாவது நாளான நேற்று, கல்வெட்டுகளை படியெடுப்பது குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அருங்காட்சியகத்தில் உள்ள விஜயநகரக் கால கல்வெட்டை படியெடுத்து அதில் உள்ள எழுத்துக்களை படிக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டது. இப்பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் கிருஷ்ணன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து