முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எர்ணாவூர் இரயில்வே தண்டவாளம் அருகே சுரங்கபாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      சென்னை
Image Unavailable

 

சென்னை மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் திருவொற்றியூர் 4வது வட்டத்தில் எர்ணாவூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் 32 நகர்களை உள்ளடக்கியது. இங்கு சுமார் 1 லட்த்திற்கும் மேற்ப்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அதேபோல் கடற்கரை பகுதியில் ஆல்இந்தியாரேடியோ நகர், காசிவிசாலாட்சிபுரம், கே.வி.கே.குப்பத்தின் ஒருபகுதி மற்றும் சுனாமிநகர் உள்ளது. இந்த இரண்டு பகுதிக்கு இடையில் சென்னை சென்டரலில் இருந்து ஆந்திரா, டெல்லி செல்லும் அகல இருப்புபாதை உள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பு இந்த இருப்புபாதையில் வழியாக இரயில்வே கேட் போடப்பட்டு பேருந்துகள் சென்று வந்தது. இதற்கிடையில் ரயில்வே இருப்பு பாதை விரிவுபடுத்தியதால் கேட் அகற்றப்பட்டது. இதற்கிடையில் ஆல்இந்தியாரேடியோ நகரிலும் காசிவிசாலாட்சிபுரத்திலும் இரண்டு மயானங்கள் உள்ளன.

32 நகர் நிர்வாகிகள்

இந்த மயானங்களில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு இரயில்வே கேட் தண்டவாளம் தடையாய் இருந்து வந்தது. இதுகுறித்து கடந்த ஆட்சியில் மாமன்ற கவுன்சிலர் எஸ்.சரவணன் மற்றும் கிராமசேவாசங்கம், கிராமநலச்சங்கம், எர்ணீஸ்வரர்நகர், குடிவாழ்வோர் நலச்சங்கம் உட்பட 32 நகர் நிர்வாகிகள் இரயில்வே துறைக்கு எர்ணாவூர் கேட்டில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த சூழ்நிலையில் சென்னை சென்டரல் இரயில்வே துறையினர் இரயில்வே தண்டவாளம் அருகே தடுப்பு வேலி அமைத்தனர். இதற்கு எர்ணாவூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது நேற்று திருவொற்றியூர் எண்ணூர் சரக உயர்அதிகாரி திம்மையா சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது முன்னாள கவுன்சிலர்கள் எஸ்.சரவணன், சு.ஜெயசந்திரன், கிராமத்தலைவர்கள் சி.பாஸ்கர், சுப்பிரமணி, எஸ்.எஸ்.குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது இந்த வழியாக உயர்நிலைப்பள்ளி, மருத்துவமனை, கடைவீதி, கோயில்ஸ்தலங்கள் மற்றும் மயானத்திற்கு சடலங்களை கொண்டு செல்வதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளதால் இந்த இடத்தில் இரயில்வே கேட் அல்லது சுரங்கபாதை அமைத்து தருமாறு அதிகாரி திம்மையாவிடம் கேட்டு கொண்டனர்.

அதற்கு அவர் இரயில்வே உயர்மேலதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கைகளை எடுத்து கூறுகிறேன். நீங்களும் எல்லா நகர் நிர்வாகிகளும் இணைந்து உயர்அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அளியுங்கள் என்று ஆலோசனை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து