முக்கிய செய்திகள்

காஞ்சிபுரத்தில் அதிமுக நிர்வாகி படத்திறப்பு விழா

kanchi

காஞ்சிபுரம் ஒன்றிய அதிமுக மாவட்ட மகளிரணி நிர்வாகி இராஜேந்திரிஅம்மாள் படத்திறப்பு விழா நேற்று காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தும்பவனம்ஜீவானந்தம் தலைமை தாங்கினார்.

மௌன அஞ்சலி

 காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பென்ஜமின் கலந்துமாவட்ட மகளிரணி நிர்வாகி இராஜேந்திரிஅம்மாள் படத்தினை திறந்து வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழுப்பெருந்தலைவர்கள் டி.ஜீவானந்தம் கமலக்கண்ணன், நகர செயலாளர் ஸ்டாலின், சுமதிஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து