முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.65 கோடி மதிப்பீட்டில் கிரிவலப் பாதை விரிவாக்கம் பணிகள்: கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்க மேம்பாட்டு பணி ரூ. 65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது. இப்பணியினை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரிவாக்கம் பணிகள்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயில் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத் துறை மூலமாக 14 கி.மீ. கிரிவலப் பாதை ரூ.65 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை திருவண்ணாமலை காஞ்சி சாலையில் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி 2.6 கி.மீ. நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா 25.9.2015 அன்று சட்டமன்ற பேரவையில் 110-விதியின் கீழ் ரூ.65 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயில் கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக நடைபாதை, வடிகால் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

அதன் அடிப்படையில் கிரிவலப்பாதையில் நடைபெற்றும் வரும் கிரிவலப் பாதை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளில், திருவண்ணாமலை காஞ்சி சாலையில், அண்ணா வளைவுவிலிருந்து 2.6 கி.மீ. தூரத்திற்கு சாலையின் இருபுறமும் பக்க கால்வாய் 3700 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்றுள்ளது, மீதமுள்ள இடத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 8 இடங்களில் நடைபெற்று வரும் சிறு பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணி தற்போது 1700 மீட்டர் நீளத்திற்கும் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் த.பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் ந.பூபாலன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ப.கருணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து