அருங்கால் கிராம மக்கள் தொடர்பு முகாமில் ரூ.21 லட்சத்து 46 ஆயிரத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் க.லட்சுமி பிரியா வழங்கினார்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      அரியலூர்
pro Ariyalur

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், அருங்கால் கிராமத்தில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, தலைமையில் நேற்று (14.02.2018) நடைபெற்றது.

 மாற்றுத்திறனாளிகள்

மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் முன்னிலை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உபகரணங்கள் ரூ.57 ஆயிரத்து 210 மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த அரியலூர், சுப்புராயபுரம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 5 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.11 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான வங்கி கடனுதவிக்கான காசோலைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.4 இலட்சத்து 79 ஆயிரத்து 884 மதிப்பிலான வேளாண் இடுப்பொருட்களையும், வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் 17 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலும், நத்தம் வீட்டுமனைப்பட்டா 1 பயனாளிக்கும், இறப்புச் சான்றுகள் 2 பேருக்கும், பட்டா மாறுதல் ஆணைகள் 8 பேருக்கும், வாரிசு சான்றுகள் 5 பேருக்கும், முதியோர் உதவித்தொகை 14 பேருக்கு ரூ.1 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலும், சமூக பாதுகாப்பு நலத்திட்ட உதவித்தொகை 14 பேருக்கு ரூ.1 இலட்சத்து 88 ஆயிரத்து 500 மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு தையல் இயந்திரம் மற்றும் ஒருவருக்கு சலவைப்பெட்டி மொத்தம் ரூ.14 ஆயிரத்து 745 மதிப்பிலும், வேளாண்மைத் துறையின் சார்பில் 12 பேருக்கு ரூ.1 இலட்சத்து 12 ஆயிரத்து 757 மதிப்பிலும் என ஆகமொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்து 46 ஆயிரத்து 096 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, பேசியதாவது :- அருங்கால் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமிற்கு முன்னதாக பொதுமக்களிடமிருந்து 107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, இதில் 97 கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வளர்ச்சித்திட்டம்

இந்த முகாமில், வேளாண்மைத்துறை, கால்நடைப்பராமரிப்புத்துறை, செய்தித்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் சார்பாக பொதுமக்களுக்கு திட்ட விளக்கி அரங்குகள் அமைக்கப்பட்டும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு நலத்திட்டங்கள் பற்றி அதிநவீன மின்னணுத் திரை வாகனம் மூலம் படக்காட்சியும் இங்கே சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. வேளாண் துறை, வருவாய்த்துறை போன்ற அனைத்துத்துறைகளின் அலுவலர்கள் அலுவலகங்களில் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, பேசினார்கள்.

இக்கூட்டத்தில், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) ஜெ.பாலாஜி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.வீ.சி.ஹேமசந்த்காந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் இ.கதிரேசன், இணை இயக்குநர் (கால்நடைப்பராமரிப்புத்துறை) மரு.எம்.நஸீர், மாவட்ட துணைப்பதிவாளர் (பொதுவிநியோகத்திட்டம்) செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டார்கள். அரியலூர் வட்டாட்சியர் சு.முத்துலெட்சுமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து