எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலத்தில் மாசான அம்மாவாசை எனப்படும் மயான கொள்ளையில் பக்தர்கள் காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடு, கோழிகளை வாயில் கடித்து வந்தது பக்தர்களிடையே பரவசம் ஏறபடுத்தியது.நோய் நீங்கவும், குழந்தை பாக்கியம், பிணி நீங்க வேண்டி சுடுகாட்டில் படுத்து பக்தர்கள் நேர்த்திகடன்.
மயான கொள்ளை
கடும்கோபம் அடைந்த அம்மன் உலகில் உள்ள உயிர்களை பலி கொண்டு ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது அங்காளபரமேஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்த சிவன் ருத்ர நடனமாடி அம்மனை சங்கலியால் கட்டிப்போட்டார். அம்மனின் அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் அம்மாவசை தினத்தில் அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக அம்மாவசை தினத்தில் மயானகொள்ளை விழா நாடுமுழுவதும் வெகு விமர்சியாகவும், கோலாகலமாகவும், நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தாலும் சேலத்தில் பல நூறு ஆண்டுகாலமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மயான கொள்ளை நிகழச்சி மிகவும் சிறப்புவாய்ந்தது ஆகும். இந்த மயான கொள்ளைக்காக பக்தர்கள் பதினைந்து தினங்களுக்கு முன்னரே விரதம் இருந்து மஹாசிவராத்தி தினந்தில் அங்காளம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
காளி வேடம்
இது குறித்து பக்தர்கள கூறும்போது பல ஆண்டுகாலமாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளதாகவும், அம்மன் வரும்போது படுத்துக்கொண்டால் தீராத நோய் நீங்கும், என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் கூறும்போது இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் குடும்பம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


