முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோகனூர் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சிக்குட்பட்ட மோகனூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி நேற்று (15.02.2018) அமைக்கப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியினை பேருந்து நிலையத்திற்கு வருகைதந்த பயணிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

புகைப்பட கண்காட்சி

இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர்.வெ.சரோஜா ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், கலெக்டர் மு.ஆசியா மரியம் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இப்புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியினை பயணிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை இப்புகைப்படக் கண்காட்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது என்று பெருமையுடன் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கி.மோகன்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து