முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கையில் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி 1098 சேவை மையம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      சிவகங்கை
Image Unavailable

 சிவகங்கை.-சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளியில்   மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையின் மூலம் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி 1098 சேவை மையம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.க.லதா,இ.ஆ,ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்   ஆட்சித் தலைவர் அவர்கள் பேசுகையில்,
         ஆதிகாலத்தில் மனிதர்கள் தங்கள் பழக்க வழக்கங்களை சைகை வழியாக கடைபிடித்து வாழ்ந்த நிலை மாறி மனிதனின் பரிமாண வளர்ச்சியில் நாகரிகம் வளர பல்லாயிரக்கான மொழிகள் பிறந்தன. மனிதர்களுக்கு பல்வேறுவிதமானப் பிரச்சனைகள் வரத் தொடங்கின. தகவல் பரிமாற்றத்தை சமூகரீதியாக பல வன்கொடுமை நிகழ்வுகள் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட நேரிடத்தை தவிர்க்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் மூலம் பல்வேறு துறைகளின் வாயிலாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை பாதுகாத்து வரப்படுகின்றன. மேலும், பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தவிர்க்கும் நிலையை மாற்றிடவும், மேலும், போதிய விழிப்புணர்வுகள் தெரிந்து கொள்ளவும் மாவட்ட அளவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட தொழிலாளர் நலம் ஆகியத் துறைகள் ஒருங்கிணைந்து மாவட்ட அளவில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதுடன் குழந்தைகளுக்கு தேவையான படிப்புக்களை மேற்கொள்ள வழிமுறையை செய்வதுடன், அவர்களின் பாதுகாப்பின் தேவையான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
          அதன் தொடர்ச்சியாக, தற்பொழுது பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களை தடுத்திட புதியதாக இலவச 1098 தொலைபேசி சேவை சிவகங்கை மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க கட்டணம் ஏதுமில்லை. இதன் நோக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். அந்த வகையில் பெண் குழந்தைகள் கல்வியை முழு அளவில் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் மனதளவில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைத்தல் மற்றும் குழந்தைத் திருமணங்களை தடை செய்தல், பாலியல் தொடர்பான புகார்கள் ஆகியவற்றை மேற்கொண்ட இலவச சேவை மையத்தில் தெரிவித்து தங்கள் பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்று, புகார்கள் வரும் நிலையில் தெரிவிப்பவர்கள் குறித்தும், பாதிப்பு அடைந்தவர்கள் குறித்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். எனவே, தகவல்கள் தெரிவிப்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை. இதுபோன்ற அரசின் சேவைகளை சிறந்த முறையில் பயன்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வதுடன், உயர்ந்த இலட்சியங்களைப் பெற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, தெரிவித்தார்.
        இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி,   துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து