முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் ஸ்ரீனிவாசபெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      சேலம்

 

சேலம் சின்னத்திருப்பதி பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திருக்கோவில் வெங்கடேஷ பெருமாள் திருக்கோயில் இந்த திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஸ்ரீனிவாச திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுவது வழக்கம் அதே போல இந்த ஆண்டும் முப்பத்தி ஏழாம் ஆண்டு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது

திருக்கல்யாணம்

 

கடந்த வாரம் வெங்கடேஷ பெருமாளின் கருட சேவை மற்றும் பல்வேறு வைபவங்கள் நடைபெற்றது இதனை அடுத்து அதன் தொடர்ச்சியாக ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் ஆண்டாள் தாயாருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து பல்வேறு விதமான வாசனை மலர்களால் மாலையாக தொடுக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, திருமண மேடைக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் வேதங்கள் முழங்க மஹா ஹோமம் நடைபெற்றது,

இதன் தொடரச்சியாக பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் கங்கன கயிறு கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் திருமண ஆடை அணியப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்யம் கான்பிக்கப்ட்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது, பின்னர் மங்கள வாத்தியம் முழங்க ஸ்ரீ ஆண்டாளை பட்டாச்சாரியார் நடனம் ஆடிய படி அழகிரி நாதர் ஸ்ரீ ஆண்டாள் தம்பதி சமேதராய் அமர்த்தப்பட்டு

நங்கவல்லி எனும் நலுங்கு பூஜை நடைபெற்றது இதனை தொடர்ந்து ;ஸ்ரீ வல்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலையை ஸ்ரீ அழகிரி நாதருக்கு சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை கண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்த கோவிந்த என பெருமாளை அழைத்தது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மேல தாளம் முழங்க ஸ்ரீ அழகிரி நாதருக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் மகாதீபாராதனை தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இந்த வைபவத்தை காண சேலம் மாநகர பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் மேலும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து