Idhayam Matrimony

தருமபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் எஸ்.மலர்விழி, தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் எஸ்.மலர்விழி, தலைமையில் நடைபெற்றது.

குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சாலை வசதி, பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளை கிணறு, தகனமேடை, குடிநீர் வசதி, புதிய மின் இணைப்பு வசதி, பட்டா வேண்டுதல், தரைமட்ட பாலம், மூன்று சக்கர வண்டி மற்றும் முதியோர் ஓய்வூதியத் தொகை மற்றும் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் என மொத்தம் 399 மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி ஒருவார காலத்திற்குள்; மனுக்களை பரிசீலித்து தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டார்.

தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.17,980 மதிப்பில் நவீன ஒளிரும் மடக்;கு குச்சிகள் 05 நபர்களுக்கு மற்றும் 2 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வங்கி கடன் மான்யம் தலா ரூ.10,000- க்கான காசோலைகளை கலெக்டர் எஸ்.மலர்விழி, வழங்கினார்.

இக்கூட்டத்தில்; மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) முத்தையன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து