Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் நீர்நிலை உருவாக்குதல், வெங்காய சேமிப்பு கிடங்கு 50 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது : செய்தியாளர் பயணத்தில் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில், 50 சதவீத அரசு மானியத்தில் மகிழம்பாடி ஊராட்சியில் துரை அவர்களின் நீர்நிலை உருவாக்குதல், மருதூர் செபாஸ்டின் அவர்களின் வெங்காயம் சேமிப்பு கிடங்கு, வாளாடியில் ஆரோக்கியராஜ் அவர்களின் நிலப்போர்வை மூலம் சம்மங்கிப் பூ பயிரிடப்பட்டுள்ளதை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சுற்றுப்பயணத்தில், செய்தியாளர்களுடன் சென்று நேற்று (27.02.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தியாளர் பயணம்

இச்செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தெரிவித்ததாவது: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் 7114 எக்டர் பரப்பிலும், பழப்பயிர்கள் 7923 எக்டர் பரப்பிலும், நறுமணப்பயிர்கள் 1324 எக்டர் பரப்பிலும், மலர்ச்செடிகள் 635 எக்டர் பரப்பிலும் பயிரிடப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு 2017-18ல், தேசியதோட்டக்கலை இயக்கதிட்டத்தின்கீழ் பழமரக் கன்றுகள் செடிகள், பூச்செடிகள் மற்றும் நறுமணப்பயிர்கள் சாகுபடி செய்வதற்கும், நிலப்போர்வை, சிப்பம் கட்டும் அறை, பாதுகாக்கப்பட்ட முறையில் சாகுபடி செய்வதற்கு நிழல் வலைக் கூடாரம், பசுமைக்குடில் அமைப்பதற்கும் ரூபாய் 259.596 இலட்சத்திற்கு இலக்குகள் பெறப்பட்டு பணிநடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய வேளாண்மைவளர்ச்சித் திட்டத்தில் 2017-18 ம் ஆண்டிற்கு ரூபாய் 94.822 இலட்சம் நிதி பெறப்பட்டு, வாழைத்தார் உறையிடுதல், வெங்காய பரப்பு விரிவாக்கம் மற்றும் வெங்காய சேமிப்புக் கிடங்கு ஆகிய திட்டங்களுக்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பணிநடந்து கொண்டிருக்கிறது.

தேசிய நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு 1400 எக்டருக்கு இலக்கு 2017-18ம் ஆண்டு பெறப்பட்டு, நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கான பதிவு பணிநடைபெற்று வருகிறது. நுண்ணீர்ப்பாசனம் மற்றும் இதரதிட்டங்களில் பயன் பெற வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயனடையலாம். திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 27 யூனிட்டுகள் மருங்காபுரி, வையம்பட்டி, மணப்பாறை, துறையூர், உப்பிலியபுரம், மண்ணச்சநல்லூர், தொட்டியம், முசிறி ஆகிய பகுதிகளில் நீர் ஆதாரக் குளங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீர் ஆதாரம் வடிவமைத்தல் இனத்தில் 1 யூனிட் (20203மீ) அளவுக்கு ரூபாய் 75000 மானியமாக வழங்கப்படுகிறது.

இலால்குடி வட்டாரம் மகிழம்பாடி கிராமத்தை சேர்ந்த துரை, .பெ.சண்முகம் என்கிற பயனாளிக்கு 2017-18 ஆம் நிதியாண்டின் கீழ் நீர் ஆதாரம் வடிவமைத்தல் இனத்தில் 12 லிட்டர் திறன் கொண்ட 1 யூனிட் (20203மீ) அமைத்தமைக்கு 50 சதவீதம் மானியத் தொகையாக ரூபாய் 75000 வழங்கப்படவுள்ளது. இதனுடன் நுண்ணீர் பாசனமும் அமைத்து எலுமிச்சை, இக்ஸோரா, மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய உள்ளார்  நிலப்போர்வை இனத்திற்கு 1 எக்டருக்கு ரூபாய் 16000 வழங்கப்பட்டு வருகிறது. வாளாடியை சேர்ந்த ஆரோக்கியராஜ் த.பெ.மைக்கேல் அவர்களுக்கு சம்மங்கி பயிர்களுக்கு நிலப்போர்வை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மானியத் தொகையாக 0.5 எக்டருக்கு ரூபாய் 8000 பெற்றுள்ளார் நிலப்போர்வை அமைப்பதன் மூலம் களைசெடிகளை கட்டுப்படுத்துவதுடன் மண்ணின் ஈரப்பதத்தையும் தக்கவைத்துக் கொள்கிறது. மேலும் உரமிடுவதால் நீர் வழியே உரம் அதிகம் வீணாகுவதை தவிர்க்கிறது. இதன் மூலம் பயிர்களைநோய் மற்றும் பூச்சிதாக்குதலை குறைக்கிறது. இவ்வாறு தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இச்செய்தியாளர் சுற்றுபயணத்தில் இலால்குடி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் தனசேகரன் மற்றும் வேளாண்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து