முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் அரசு பள்ளியில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,  பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மையத்தை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,,  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிளஸ்-2 தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில்  முதல் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வில் 284 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்கள் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்களில் 5681 மாணவர்களும், 6357 மாணவிகளும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களில் 7233 மாணவர்களும், 7740 மாணவிகளும் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களில் 6662 மாணவர்களும் 6197 மாணவிகளும் என மொத்தம் 127 மையங்களில் 39870 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.தனித் தேர்வர்களுக்காக 4 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக மாற்றுத் திறனாளி மாணவர்கள் 39 போர் தேர்வு எழுத உள்ளனர்.  அவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டு நல்ல முறையில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தேர்வுப் பணியில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 3000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (பணியாளர்), முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் தலைமையில் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடாவண்ணம் கண்காணிக்கப்பட உள்ளனர்.அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தேர்வு நாட்களில் தடையற்ற மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,,  தெரிவித்தார்.இவ்வாய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து