எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பூரில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சத்துடன் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் பெரியார்நகரை சேர்ந்தவர் குமார். குடிநீர் சுத்திகரிப்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவர் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.25 லட்சம் தேவைப்பட்டது.
கைது
அவரிடம் ரூ.15 லட்சம் இருந்ததால் மீதி தொகை ரூ.10 லட்சத்தை கடனாக வாங்கி தரும்படி தனது நண்பர் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தை சேர்ந்த லோகேசிடம் கூறினார். அவர் அம்பத்தூரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி தருவதாகவும், ஆனால் ரூ.15 லட்சத்தை அவரிடம் காட்டினால்தான் கடன் தருவார் என்று லோகேஷ் கூறினார். இதையடுத்து நேற்று மூன்தினம் இரவு ரூ.15 லட்சத்துடன் குமார் அம்பத்தூர் சூரப்பட்டுக்கு சென்றார்.
அவரிடம், லோகேஷ் ரூ.15 லட்சத்தை வாங்கி கடன் கொடுப்பவரிடம் காட்டி விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் பணத்துடன் மாயமாகி விட்டார். இதுகுறித்து குமார் அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொற்கொடி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். லோகேசின் செல்போன் சிக்னல் வைத்து செங்கல்பட்டில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


