முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

36 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 5 ஆயிரத்து 760 மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      கன்னியாகுமரி
Image Unavailable

 36 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சத்து 5 ஆயிரத்து 760 மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  

குமரி மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது. திங்கட்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நலஉதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 250 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டம், வடக்கு தாமரைக்குளம் கிராமத்தில் தகுதி வாய்ந்த வீடற்ற 36 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சத்து 5 ஆயிரத்து 760 மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரமேஷ், கோட்டாட்சியர் ஜானகி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.கே.சாய் வர்த்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) செல்வகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து