கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 86 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      கடலூர்
Minister MC Sampath issued the orders for 86 persons at the Employment Campus in Cuddalore District

 கடலூர் மஞ்சக்குப்பம் செயின் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 86 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வே.ப.தண்டபாணி,   முன்னிலையில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்   வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  தெரிவித்ததாவது.

மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  நல்லாசியோடு  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 43,200 நபர்களுக்கு 1,03,000 வேலைவாய்ப்பினை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017-2018 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 4,312 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 72 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று பல்வேறு பணியிடங்களுக்கு 798 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2017-2018 ஆம் ஆண்டில் ப்ல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதில் கூடுதலாக 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிப்பதற்கு தம்pழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 92 நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்நிறுவனங்கள் மூலம் 9 ஆயிரம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சார்ந்த ஐந்தாம் வகுப்பு முதல் பொறியியல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித்தகுதி உடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல தனியார் முன்னணி நிறுவவனங்களான அசோக் லேலாண்ட், யமஹா மோட்டர்ஸ், பிரேக்ஸ் இந்தியா லிமிட்டெட், சாம்சங், விப்ரோ, அப்பல்லோ. யுரேகா ஃபோர்ப்ஸ், ஆம்வே இந்தியா போன்ற நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமா மற்றும் பி.இ படித்த இளைஞர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.கடலூர் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்துள்ளார்கள். டைலரிங் முடித்தவர்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் (டிப்ளமாஃபி.இ) மற்றும் வேதியியல் பாடப் பிரிவில் பி.எஸ்ஸி மற்றும் எம்.எஸ்ஸி முடித்துள்ளோருக்கு முகாமில் பணி கிடைத்துள்ளன.மேலும், கடலூரில் உள்ள டிவிசி எலக்ட்ரானிக்ஸ், ஏபிடி மாருதி, விஸ்டி மோட்டார்ஸ், ஜே.கே.ஆர் டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்கள் விற்பனையாளர், கணக்கர், மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரி கல்வித் தகுதிகளை உடைய மனுதாரர்கள், இம்முகாமில் தேர்வு செய்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இளங்கலை, முதுகலை ஆசிரியர் மற்றும் குழந்தை காப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் இம்முகாமில் தேர்வு செய்துள்ளார்கள். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கான பதிவும் இம்முகாமில் நடைபெறுகிறது.கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2இ78இ346 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளார்கள். 2017-ம் ஆண்டில் 32இ316 மனுதாரர்கள் தங்கள் பதிவினை புதுப்பித்துள்ளார்கள்.  மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு புதுப்பித்தல் சலுகையின் கீழ், 1153 மனுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துள்ளனர்.      கடலூர் மாவட்டத்தை சேர்ந்த, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு பணிகளை பெறுவதற்கு ஏதுவாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நடத்தப்படுகின்றன. கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் 2017-18-ம் நிதியாண்டில், இத்திட்டத்தின்கீழ் 2077 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் 849 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,89,19,800ஃ- உதவித் தொகையாகப் பெற்று வழங்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால், இம்மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களின் வேலைபெறும் திறனை அதிகரிக்கும் விதமாக பல்வேறு திறன் பயிற்சிகள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து இலவசமாக வழங்கப்படுகிறது.  மேலும் பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.100ஃ- போக்குவரத்து படியாக பெற்று வழங்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும் இன்றைய தினம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஆண்கள் 1490 நபர்களும், பெண்கள் 1361 நபர்களும் ஆக மொத்தம் 2,831 நபர்கள் பங்குபெற்று இவர்களில் ஆண்கள் 427 நபர்களுக்கும், பெண்கள் 304 நபர்களுக்கும் ஆக மொத்தம் 731 நபர்களுக்கு  இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த அனைவரையும் உதவி இயக்குநர் (வேலைவாய்பு) எம்.கருணாகரன்  வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சரவணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் ம.தனலட்சுமி, கே.லாவண்யா, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜவஹர்லால், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் லட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜி.பீட்டர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மு.முரளிதரன்  நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து