முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா வழியில் நல்லாட்சி சாதனை மலர் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன்,பி.தங்கமணி, வெ.சரோஜா வெளியிட்டனர்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அம்மா அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி , உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு அம்மா வழியில் நல்லாட்சி – அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி என்ற செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட ஓராண்டு சாதனை மலரினை வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 

 

சாதனை மலர்

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சாதனை மலரில் நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, எரிசக்தித்துறை, சமூக நலத்துறை, சத்துணவுத்திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைகள் துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை, போக்குவரத்துத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையங்கள் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் கடந்த ஒரு ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள் குறித்த சாதனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு, தாங்களும் பயன்பெற வழிவகுத்துள்ளது.

இவ்விழாவில் நாமக்கல் மாவட்ட வன அலுவலர் டாக்டர்.இரா.காஞ்சனா , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வி.சி.மாலதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கி.மோகன்ராஜ், சேலம் - நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, அரசு வழக்கறிஞர் தனசேகரன், உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலக பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து