Idhayam Matrimony

விழுப்புரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை, கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமையில்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்   திறந்து வைத்து பார்வையிட்டார்.

புகைப்படக் கண்காட்சி

இப்புகைப்படக் கண்காட்சியில்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில்,  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்படங்கள் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இப்புகைப்படக் கண்காட்சியில் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  அறிவித்த பல்வேறு சிறப்புத் திட்டங்கள் வாயிலாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தது ஆகிய சிறப்பு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

மற்றும் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை செயல்வடிவத்தில் கொண்டு வந்த திட்டங்களான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதல், கிராம புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் மற்றும் உதவித் தொகை, கலெக்டர்கள் மாநாட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவித்தல், பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் குடும்ப அட்டையுள்ள அனைவருக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்குதல், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு, அம்மா குடிநீர் ஆகியவை திறப்பு விழா உள்ளடக்கிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. நமது மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் மணிமண்டபம், கால்நடை பராமரிப்பு ஆராய்ச்சி மையம் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம், விக்கிரவாண்டி, சின்னசேலம் புதிய தாலுக்கா திறப்பு விழா உள்ளிட்ட புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற  எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் புகைப்படங்கள், அவர் தலைமையிலான அமைச்சரவை புகைப்படங்கள், முதலமைச்சர்  5 திட்டங்களை செயல்படுத்தி ஆணையிட்ட புகைப்படங்கள், கடந்த ஓராண்டில் தமிழக அரசின் மூலம் அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.இப்புகைப்படக் கண்காட்சி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்ததால் வணிகர்கள், வியாபர மக்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என 10000க்கும் மேற்பட்டோர் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர்.தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஓராண்டு சாதனை புத்தகத்தினை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  வெளியிட்டார்.அடுத்ததாக, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், வனத்துறையின் மூலம்  மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  மரக்கன்றுகளை நட்டார்.இந்நிகழ்ச்சிகளில், மண்டல வன பாதுகாவவலர் சேவாசிங்,மாவட்ட வன அலுவலர் ராகுல் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நி.சிவகுரு, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, வட்டாட்சியர் சுந்தரராஜன், காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து