மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களை தேனி கலெக்டர் .பல்லவி பல்தேவ் வழங்கினார்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      தேனி
theni pro news 9 4 18

தேனி-   தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்   தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து, 76 பயனாளிகளுக்கு ரூ.5,45,272- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 48 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணையினையும் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.52,500- மதிப்பீட்டில் (ஹைக்ரோ மீட்டர், கைத்தெளிப்பான், ஹேண்ட் லூப்பர், வெட்டுக்கத்தரி, மின்விசைத்தெளிப்பான், நெட்ரிகா-46, பவர் டில்லர், தண்டு அறுவடை இயந்திரம்) 5 விவசாயிகளுக்கு ரூ.2,62,500- மதிப்பீட்டிலான பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களையும், மாற்;றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான பராமரிப்பு உதவித்தொகையாக தலா ரூ.3,000- வீதம் 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,62,000- மதிப்பிலான பராமரிப்பு உதவித்தொகையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தேய்ப்பு பெட்டி வழங்கும்
 திட்டத்தின் கீழ் தலா ரூ.5,066- மதிப்பீட்டில் 12 பயனாளிகளுக்கு ரூ.60,792- மதிப்பிலான விலையில்லா தேய்ப்பு  பெட்டிகளையும், தேனி வட்டத்திற்குட்பட்ட 5 பயனாளிகளுக்கு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் (ஏப்ரல்-2017 முதல் மார்ச் 2018 வரை) தலா ரூ.12,000- வீதம் ரூ.60,000-த்திற்கான காசோலையினையும் என மொத்தம் 76 பயனாளிகளுக்கு ரூ.ரூ.5,45,272- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மேலும் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த 5 பயனாளிகள், தேனி வட்டத்தைச்சேர்ந்த 5 பயனாளிகள், போடிநாயக்கனூர் வட்டத்தைச் சேர்ந்த 3 பயனாளிகள், உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த 5 பயனாளிகள், ஆண்டிப்பட்டி வட்டத்தைச் சேர்;ந்த 7 பயனாளிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 23 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும் என மொத்தம் 48 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ்  வழங்கினார்.
 இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  ச.கந்தசாமி  , உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து