முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமரச மையத்தின் சார்பில் நடைபெற்ற மாற்றுமுறைத் தீர்வு மையம் கூட்டம் : கலெக்டர் சீ.சுரேஷ்குமார் பங்கேற்பு

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      நாகப்பட்டினம்
Image Unavailable

 

நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் 13வது ஆண்டு விழாவையொட்டி மாவட்ட சமரச மையத்தின் சார்பில் மாற்றுமுறைத் தீர்வு மையம் நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதி ஆர்.பத்மனாபன் தலைமையில் முனைவர்.சீ.சுரேஷ்குமார்,, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய்,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

சமரச தீர்வு மையம்

இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் 13வது ஆண்டு நிறைவு விழா நாகப்பட்டினம் மாவட்ட சமரச மையத்தின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. தமிழ்நாடு சமரச மையம் சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகிறது. வழக்குத் தரப்பினர்கள், தம் எதிர்ப்பினருடன் பேசி சமரசம் செய்து கொள்ள ஏதுவாய் நீதிமன்றம் இங்கு வழக்குகளை அனுப்புகிறது.

இங்கு நன்கு பயிற்சியளிக்கப்பட்ட சமரசர்கள் வழக்குத் தரப்பினர்கள் சுமூகமாக வழக்கை முடித்துக் கொள்ள உதவுவர். நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு வழக்குத் தரப்பினர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. தனிப்பட்ட முறையில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த தனியறைகள், காத்திருக்க இடவசதி முதலியவை சமரச மைத்தில் உள்ளன. நீதிமன்றத்தில் அனைத்து வேலைநாட்களிலும், நாள் முழுவதும் இந்த சமரச மையம் இயங்கும். மாவட்ட சமரச தீர்வு மையத்தின் மூலம் முறையான பயிற்சி அளிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இரு தரப்பினர்களையும் அழைத்துப் பேசி வழக்கு பிரச்சனைக்கு சமரசமான முறையில் தீர்வு எட்டப்படும்.

சகோதர சகோதரிகளுக்கிடையேயான சொத்து பாகப்பிரிவினை வழக்குகள். கணவன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கிடையேயான ஜீவனாம்ச வழக்குகள். விவாகரத்து வழக்குகள். இதர குடும்பம் சார்ந்த பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள். இதர உரிமையியல் வழக்குகள் அனைத்திலும் வழக்காடிகள் தங்களது பிரச்சனைகளை மேற்படி மாவட்ட சமரச தீர்வு மையத்தில் ஆநனயைவழச எனப்படும் நடுவர் முன்பாக ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தங்களுக்குள்ளாகவே தங்களது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும." என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாகப்பட்டினம் சார் கலெக்டர் திரு,கே.பி.கார்த்திகேயன்,, மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன், நாகப்பட்டினம் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜி.ராஜா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் கே.ரவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து