முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் ஒரு மாதம் குறிஞ்சி விழா

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல் - கொடைக்கானலில் ஒரு மாதம் குறிஞ்சிப்பூ விழா நடைபெறும்
 கொடைக்கானலில் இம்மாதம் ஆகஸ்டு 11ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை குறிஞ்சிப்பூ விழா ஒரு மாதம் வரை நடை பெறும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் வினய் கூறினார்.
 கொடைக்கானலில் நேற்று குறிஞ்சிப்பூ விழா நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் வினய் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூ தற்போது கொடைக்கானல் மலை முழுதும் பூத்துள்ளது. இந்த அதிசய குறிஞ்சிப்பூவின் மகத்துவத்தை உலகம் முழுதும் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கொடைக்கானலில் இம் மாதம் 11ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 11 ம் தேதி வரை ஒரு மாதம் குறிஞ்சிப்பூ விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பல நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது. குறிஞ்சி பற்றிய கையேடு வழங்கவும், கொடைக்கானல் குறிஞ்சி மற்றும் மலைப்பகுதயில் உள்ள சுற்றுலா முக்கிய இடங்கள் பற்றிய வீடியோ வெளியிடவும், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்கவும், குறிஞ்சி விழா நடைபெறுவதை அறிவிக்கும் விதமாக கோக்கர்ஸ் வாக், மற்றும் சில்வர் கேஸ்கெட் பகுதிகளில் அலங்கார வளைவுகள் அமைக்கவும், இந்த விழாவிற்கான லோகோ, மற்றும் ஸ்டிக்கர் வடிவமைக்கவும் முடிவு செய்யபட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் இந்த குறிஞ்சிப் பூவினை கண்டு களிக்கவும் இதன் பெருமையை அறிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 கொடைக்கானல் கீழ் குண்டாறு குடிநீர் திட்டம் பற்றிய வனப் பகுதியில் ஆய்வு செய்து இத் திட்டம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேதமான சாலைகள் விரைவில் சீர் செய்யப்படும். சுற்றுலா நிதி மூலம் அமைக்கப்பட்ட பழுதடைந்த மின் விளக்குகள் விரைவில் சீரமைக்கப்படும். நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் பற்றி ஆய்வு செய்யப்பட்டு அகற்றப்படும். கல்லறை மேடு பகுதியில் உள்ள மயான புறம்போக்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. மோகன், டி.எப்.ஓ. தேஜஸ்வி, தாசில்தால் பாஸ்யம், பி.டி.ஓ. மகேந்திரன்,கொடைக்கானல் ரோட்ரி சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் தனசேகர், கட்டுமானோர் சங்க தலைவர் மாரிச்சாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து