முல்லைப் பெரியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு.கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை.

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      தேனி
mullai news

 கம்பம் -கன மழை எதிரொலியாக முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கம்பம் கூடலு£ர் உத்தமபாளையம் சின்னமனு£ர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை கொட்டி வருகிறது.இதனால் அணையின் நீர்  மட்டம் 142 அடியை எட்டியது.அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 336 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கம்பம்,உத்தமபாளையம்,சின்னமனு£ர்,வீரபாண்டி ஆகிய பகுதிகளில் பெய்த கன மழையால் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.இந்த ஆற்றுடன் சுருளி ஆறு மற்றும் கூடலு£ர் அருகே உள்ள சுரங்கனார் நீர் வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீரும் சங்கமித்து செல்கிறது.லோயர் கேம்ப் முதல் வைகை அணை வரை முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேற்கு தொடர்ச்சி மலை மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் உத்தமபாளையம்,சின்னமனு£ர்,வீரபாண்டி,பழனிசெட்டிப்பட்டி பகுதிகளில் தடுப்பணை இருப்பதே தெரியாத அளவுக்கு அவற்றை முழ்கடித்த படி வெள்ளம் சீறிப் பாய்ந்தது.வீரபாண்டியில் படித்துறை வெள்ளத்தில் முழ்கியது.அங்கு அமைக்கப்பட்டிருந்த குடி நீர் திட்டங்களுக்கான உறை கிணறுகளும் வெள்ளத்தில் முழ்கின.முல்லைப் பெரியாறு கரையோர கிராம மக்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.சுருளிப்பட்டி பென்னிகுவிக் பாலம்,தொட்டமாந்துறை ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பல ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.சுருளிப்பட்டி பென்னி குவிக் பாலம் தொட்டமான் துறை தடுப்பணை ஆகிய பகுதிகளில் ஆபத்தை உணராத சில இளைஞர்கள் செல்பி எடுக்கின்றனர்.அப்படி செல்பி எடுத்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.கம்பம் நகராட்சி பகுதியில் குடி நீர் வினியோகம் செய்யும் வகையில் லோயர் கேம்ப்,சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் உறை கிணறுகள் உள்ளன.தற்போது பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் உறை கிணறுகள் மூடப்பட்டுள்ளன.இதனால் உறை கிணறுகளில் இருந்து கம்பத்துக்கு குடி நீர் விநியோகம் செய்வதை நிறுத்தியுள்ளது.இதற்கிடையே உறை கிணறு அமைந்துள்ள பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் ந.சங்கரன்,நகராட்சி பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின்னர் நகராட்சி ஆணையாளர் கூறும் போது உறை கிணறுகள் தண்ணீர் முழ்கி விட்டது.அப்படியே அந்த தண்ணீரை வினியோகம் செய்தால் பொது மக்களுக்கு நோய் பரவும் அபயாம் உள்ளது.இதனால் குடி நீர் விநயோகம் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது என்றார்.ஹைவேவிஸ் மேகமலை வனப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதனால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து