சத்தீஸ்கரில் துப்பாக்கி சண்டை:நக்ஸலைட் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
chattishgarh shot dead 2017 8 13

ராய்ப்பூர்,சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக நாராயண்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர சுக்லா கூறியதாவது:-

நாராயண்பூரின் கலிபால் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது, வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள், காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காவல்துறையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து