போக்கோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல்: நைஜீரியாவில் வீரர்கள் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      உலகம்
Nigeria soldier death 2018 9 4

அபுஜா : நைஜீரியாவில் போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.

ஆயுதம் ஏந்தி...

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போக்கோஹரம் பயங்கரவாதிகளுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது.

30 வீரர்கள் பலி...

இதற்கிடையே, அந்நாட்டின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள ஜாரி எனும் கிராமத்தில் அமைந்துள்ள நைஜீரிய ராணுவ தளத்தின் மீது போக்கோஹரம் பயங்கரவாதிகள் கடந்த வியாழன் அன்று கடும் தாக்குதல் நடத்தினர்.  பல்வேறு வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

பலி எண்ணிக்கை...

இந்நிலையில், நைஜீரியாவில் போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து