ராமநாதபுரத்தில் அக்.5 ல் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள்

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
1 keram news

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கேரம்விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
 2018 -2019 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் 5-ந் தேதி காலை 9 மணியளவில் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் கீழ்குறிப்பிட்ட பிரிவுகளாக நடத்தி ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடைபெறவுள்ளது. இளநிலைப்பிரிவு (மழலை வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை) முதுநிலைப்பிரிவு (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ) நடைபெறும். மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர்கள் இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் மூன்று இடம் பெறும் வீரர், வீராங்கணைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை கோடிட்ட காசோலையாக முறையில் வழங்கப்படும்.  எனவே மாணவ, மாணவியர்கள் தங்களது வங்கிப் புத்தக நகலினை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து