நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான வழக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தது பசுமை தீர்ப்பாயம்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      இந்தியா
national green tribunal 09-10-2018

புது டெல்லி,நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம். தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், நியூட்ரினோ திட்டத்துக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். திட்டத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட வேண்டும்.இத்திட்டத்தை தனது அதிகார வரம்பிற்கு மீறி சுற்றுச்சூழல் அனுமதிக்காக பரிந்துரைத்த மத்திய வல்லுநர் மதிப்பீட்டுக் குழு மீது சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும், சுற்றுச்சூழல் அனுமதி வழங்க உத்தரவிட்ட சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகுவேந்திர எஸ். ராத்தோர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நியூட்ரினோ திட்ட ஒப்புதல் தொடர்பாக விளக்கம் அளிக்க விஞ்ஞானியாக உள்ள மத்திய அரசு அதிகாரி ஆஜராக வேண்டும். எழுத்துப்பூர்வமான வாதத்தை தி டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச் அமைப்பு சமர்ப்பிக்க வேண்டும் என்றனர்.இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணை தொடங்கியதும், தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தேனியில் நியூட்ரியோ திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் பசுமை தீர்ப்பாயம் தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து