தினகரனை நம்பி போன 18 எம்.எல்.ஏக்களும் மனநோயாளி ஆகிவிடுவார்கள் தலைமை கழக பேச்சாளர் சீரைதம்பி பேச்சு

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      தேனி
19 theni news

தேனி - தேனியில் கழக 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று பங்காளமேட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் வரவேற்றார். தேனி நகர நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், தலைமை கழக பேச்சாளர்கள் சீரைதம்பி என்ற கிருபானந்தம் மற்றும் குமரி பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இவர்கள் பேசும்போது கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நமது இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தினர். அதனால் தான் கழகம் துவக்கப்பட்ட 47 ஆண்டுகளில் 28 ஆண்டுகள் தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்ய நமது கழகத்தை ஆட்சியில் அமர வைத்து தமிழக மக்கள்  அழகு பார்த்தனர். தற்போது கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரும் கழகத்தையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கின்றனர். தினகரனை நம்பி போன 18 எம்.எல்.ஏக்களும் மனநோயாளி ஆகிவிடுவார்கள் என்று சிறப்புரையாற்றினர். தேனி நகர அம்மா பேரவை செயலாளர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம், மாவட்ட நிர்வாகிகள்,  நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தேனி நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து