முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 3 பெப்ரவரி 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேர்தல் பணி குறித்த  வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமை தாங்கினார். கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கினர். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கடந்த முறை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தின் போது இடைத்தேர்தலுக்கான அடிப்படை பூர்வாக பணிகளை செய்வதற்காக பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாகவும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு கம்பம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாகவும் நியமித்து அவர்களை பல குழுக்களாக பிரித்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஒவ்வொரு பூத் பகுதியிலும் மகளிர் 5 பேர், இளைஞர்கள் 10 பேர், மூத்த கழக உறுப்பினர்கள் 10 பேர் என பூத் கமிட்டி அமைக்கவும், பூத் கமிட்டியினர் அப்பகுதியிலேயே வாக்காளர்களாக இருக்கிறார்களா என்பதை சரிபார்க்கவும், பூத் கமிட்டியினர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக இல்லாதவாறு பார்த்தல் உள்ளிட்ட பணிகளை பொறுப்பாளர்கள் சரிபார்த்து சிறப்பான பணியை நூற்றுக்கு நூறு முடித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கிடையில் நமது கழகம் பல்வேறு சோதனைகளை கடந்து இன்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் இயக்கத்தை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நமது இயக்கத்தை ஜாதி, மத, சிறுபான்மை, பெரும்பான்மை வித்தியாசமின்றி தொண்டர்கள் இயக்கமாக நடத்தியதின் காரணமாகத்தான் நமது கழகம் தோற்றுவிக்கப்பட்டு 47 ஆண்டுகள் கடந்த பின்பும் வலுவான இயக்கமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கழகத்தை உருவாக்கினார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமது இயக்கத்தை மாபெரும் இயக்கமாக, இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக நமது இயக்கத்தை நமக்காக பெற்றுத் தந்து தியாகம் செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். உணர்வுபூர்வமாக நமது இயக்கத்தில் இருக்கின்ற தொண்டர்கள் முதல் மூத்த முன்னோடிகள் வரை அனைவரும் வயது வித்தியாசமின்றி ஒரே மாதிரியான செயல்பாடுகள் கொண்டவர்களாகவும், கட்டுக்கோப்புடனும் உள்ள ஒரே இயக்கம் நமது கழகம் தான் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறோம். டெல்லியில் இருக்கின்ற தேசிய கட்சிகளெல்லாம் நமது இயக்கத்தைப் பார்த்து பிரமிப்பு அடைகின்ற அளவிற்கு தொண்டர்கள் கடமையுணர்வோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு நமது இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்ற நிலைக்கு புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுமே காரணம் என்றும் அவர்கள் காட்டிய அன்பான, பாசமான வழியில் நாம் நமது பயணத்தை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமது இயக்கம்  எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும், வளரும் என்றும், நமது கழகம் தான் என்றும் தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் என்றும் உணர்த்தியுள்ளார். 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அடிப்படை தேர்தல் பணிகளை நாம் தற்போது முடித்திருக்கின்றோம். இந்நிலையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளது. நம் கண்முன்னால் இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையும், நமது மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. நாம் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அடிப்படை பணிகளை நாம் நூற்றுக்கு நூறு முடித்துள்ளோம். தற்போது இக்கூட்டத்தின் நோக்கம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நமது மாவட்டத்தில் உள்ள மீதமிருக்கின்ற போடிநாயக்கனூர், கம்பம் சட்டமன்ற தொகுதிகளிலும் அடிப்படை பணிகளை செய்ய வேண்டிய நிலையில், கடமையாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். அதனடிப்படையில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு பெரியகுளம் தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்களாகவும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்களாகவும் இருந்து வாக்குசாவடிக்கு குழுக்களாக சென்று தேர்தலுக்கான அடிப்படை பணிகளை சிறப்பாக கையாள வேண்டும். அப்பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடித்து  குழுக்கள் வாரியாக எப்பகுதிக்கு சென்று தேர்தலுக்கான பணிகளை செய்தனர் என்பது உள்ளிட்ட முழு விபரங்களையும் நகர, ஒன்றிய அளவில் பின்னர் சட்டமன்ற அளவில் தொகுத்து வழங்கிடும் பணியை பத்து தினங்களுக்குள் முடித்திட வேண்டும். இந்த பணிகளெல்லாம் எங்கு, எப்பொழுது, எந்த  தேர்தல் வந்தாலும் நம்முடைய பணி தலையாய பணியாக கொண்டு சிறப்பாக பணியாற்றி காரணத்தினால் தான் நமது தேனி மாவட்டம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்ற நிலையில் இருந்திருக்கின்றோம். அதே நிலையை நாம் தற்போதும் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும், எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சதவிகித அடிப்படையில் தமிழகத்திலேயே முதலாவது அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்று பெயரெடுத்தோமோ அதே போல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி தேனி தொகுதி என்று பெயரெடுத்து தர வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் செல்லமுத்து நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், மாவட்ட துணை செயலாளர் வசந்தாநாகராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், போடி சற்குணம், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, கம்பம் இளையநம்பி, உத்தமபாளையம் பி.ஆர்.பி அழகுராஜ், சின்னமனூர் விமலேஸ்வரன், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, கூடலூர் சோலைராஜ்,  தேனி கிருஷ்ணகுமார், போடி பழனிராஜ், சின்னமனூர் ராஜேந்திரன், கம்பம் ஆர்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்திரன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, வார்டு கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து