திண்டுக்கல்லில் விற்பனைக்கு வந்த முதல் தர செந்தூரம் ரக மாம்பழங்கள்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
25 dglmangoes

திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டம் நத்தம், செங்குரிச்சி, வேம்பார்பட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு ஏக்கரில் மா சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் மா சாகுபடி பாதிக்கப்பட்டது. குறிப்பாக விவசாயிகள் தொடரந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இருந்த போதும் மா விவசாயத்தில் அவர்கள் தொடரந்து ஈடுபட்டு வந்தனர்.
பல்வேறு கிராமங்களில் இருந்து திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் மாம்பழம் வியாபாரிகளால் வாங்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு வாங்கி செல்லப்படுகிறது. இந்த ஆண்டும் மழைப்பொழிவு குறைவாக இருந்ததால் மாம்பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. இதனால் வரத்தும் எதிர்பார்த்த அளவு இல்லை. முதல் தரமாக செந்தூரம் ஓரளவு தாக்குப்பிடித்து வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் செந்தூரம் மாம்பழங்களை கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான மாம்பழங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வறட்சி மற்றும் கஜா புயலால் மா விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் ஓரளவு இருந்த போதும் விலை எதிர்பார்த்த அளவு கிடைக்க வில்லை. பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வரும் கோரிக்கையான மாம்பழங்கள் பதப்படுத்தும் குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். மேலும் அரசே மாம்பழங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.
தற்போது தரத்துக்கேற்ப ஒரு கிலோ ரூ.30ல் இருந்து ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. விடுமுறை காலம் என்பதால் பொதுமக்கள் அதிக அளவு மாம்பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து