முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதார்நாத்துக்கும் எனக்கும் உணர்வுப்பூர்வ உறவு உள்ளது: தியானம் முடிந்த பின் பிரதமர் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      இந்தியா
Image Unavailable

கேதார்நாத், கேதார்நாத்துக்கும் எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று தியானம் முடிந்த பின் பிரதமர் மோடி நிருபர்களிடம் தெரிவித்தார்.

கேதார்நாத் புனித குகையில் தியானத்தை முடித்த பிரதமர் மோடி, எனக்கும் கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று கூறினார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் கேதார்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் புனித குகையில் தியானத்தை மேற்கொண்டார். நேற்று காலை வரை தியானம் இருப்பார் என்று கூறப்பட்டது.

அதன்படி நேற்று காலை வரை தியானம் இருந்த பிரதமர், தியானத்தை முடித்த பின்னர் மீண்டும் சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கேதார்நாத்தில் வழிபட்டதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். கேதார்நாத்துக்கும் எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றி வருகிறேன். காணொலி காட்சி மூலம் எனக்கான தகவல்களை நான் சேகரித்து வருகிறேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல. நாட்டில் நடப்பதில் இருந்து விலகி ஆன்மீக பயணமாக கேதார்நாத் வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து