தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துகள் -துணை ஜனாதிபதி அறிக்கை

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
venkaiah naidu 2018 10 10

புதுடெல்லி, நிலையான அரசு அமைய தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.   

 பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நிலையான அரசு அமைவதற்கு தெளிவான, திட்டவட்டமான தீர்ப்பை தேர்தலில் வழங்கிய இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். அதேபோல, இந்த தேர்தலை திறம்படவும், சுமுகமாகவும் நடத்தியமைக்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையை பெற்று இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  

எந்த கட்சியை சார்ந்திருந்தாலும் செழுமைமிக்க ஜனநாயக பாரம்பரியத்தின் அடிப்படையை மேலும் ஆழமாக்கி வளர்ச்சி, சீர்திருத்தம் மக்களின் வாழ்வில் மேம்பாடு ஆகிய லட்சியங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து