மண்டபம் அருகே விஷம் சாப்பிட்ட 11 கறவை பசுமாடுகள் பலி:போலீஸார் தீவிர விசாரணை

செவ்வாய்க்கிழமை, 28 மே 2019      ராமநாதபுரம்
28 cow dead

  மண்டபம்,-    ராமேசுவரம் அருகே மண்டபம் பகுதியில் விஷம் கலந்த கழிவு குப்பைகளை  11 கறவை பசுமாடுகள் சாப்பிட்டதால் சம்பவ இடத்திலேயே நேற்றுக்கு முன் தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தன.
    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே மண்டபம் பகுதி அமைந்துள்ளது.இந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் மண்டபம் பேரூராட்சி  நிர்வாகம் சார்பில்   குப்பை, கழிவுகளை சேகரிக்கப்பட்டு மண்டபம் முகாம் அருகேயுள்ள  முனைக்காடு வண்ணாந்தரவை பகுதியில்  கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை முனைக்காடு பகுதி வீடுகளில் வளர்க்கப்படும் கறவை பசு மாடுகள்  இறையாக உண்ணுவது வழக்கமாக வைத்திருந்தன. இந்நிலையில் திங்கள் கிழமை காலையில் இரை தேடிச் சென்ற கறவை பசுமாடுகள் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பசு மாடுகளின் உரிமையாளர்கள் பால்ராஜ், நாகலட்சுமி,  பாகம்பிரியாள் ஆகியோர்கள்  மாடுகளை தேடிச் சென்ற போது பசுமாடுகள் முனைக்காடு தரவை பகுதியில் சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக  மர்மமான முறையில் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்துள்ளது.இதைக்கண்ட  உரிமையாளர்கள் ஆகியோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர்  இது குறித்து மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அங்கு போலீஸார்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த மாடுகளை பார்வையிட்டனர்.பின்னர் கால் நடை மருத்தவருக்கு தகவல் தெரிவித்து பசுமாடுகள் இறந்ததற்கான காரணம் குறித்து அறிக்கை கேட்டுள்ளனர். மேலும்  போலீஸார்கள் இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் விசாரனை நடத்தி வருகின்றனர்.மேலும் குப்பை கழிவுகளில் கிடந்த குருணை விஷப்பவுடர் கலந்த மாவு பாக்கெட்டை உண்டதால் மாடுகள்  இறந்ததாகவும்  இறந்த மாடுகளின்  மதிப்பு 5 லட்சம் ஆகும் என மாடு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து