எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ. 4,100 மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ. 5,000 உடனடியாக நிவாரணம் வழங்கவும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித் தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து உடனடியாக மீட்பு மற்றும் நிவராணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன். நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில், கூடுதலாக மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்கள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் மற்றும் 66 ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 456 நபர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 400 நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும், 720 தூய்மைக் காவலர்களும், 160 மின்துறை ஊழியர்களும் ஆக மொத்தம் 1280 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 60 ஜே.சி.பி. இயந்திரங்கள், முப்பது 108 ஆம்புலன்சுகள், 16 ஜெனேரேட்டர்கள் மற்றும் 70 மரம் அறுப்பான்கள் பயன்படுத்தப்பட்டு மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
எனது உத்தரவின் பேரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் சத்யகோபால் ஆகியோர் உடனடியாக நீலகிரி மாவட்டத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், 13-ம் தேதி அன்று துணை முதல்வர் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு அப்பணிகளை துரிதப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு கீழ்க்கண்ட உத்தரவுகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 6910 நபர்கள் மீட்கப்பட்டு 67 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு பால் பவுடர் வழங்கப்பட வேண்டும். வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ வசதி செய்து தரப்பட வேண்டும். தொற்று நோய்கள் ஏதும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி மற்றும் குளோரின் ஆகியவை தெளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களில் இதுவரை 23 நிரந்தர மருத்துவ முகாம்கள் மற்றும் 13 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 9,333 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் தேவைக்கேற்ப இம்முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு அவர்களது குடும்பச் சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு தலா 10 லட்சம் ரூபாய் எனது உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது. அதே போல் காட்டுக்குப்பை, நஞ்சநாட்டை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் சஜீவ் என்ற நபரின் குடும்பத்தினருக்கும் 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த 11 நபர்களுக்கும் மற்றும் 2 கால்நடைகள் இழப்பிற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ. 4,100 மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ. 5,000 உடனடியாக நிவாரணம் வழங்கவும் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித் தர உத்தரவிட்டுள்ளேன். சேதமடைந்த தோட்டக்கலைப் பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணியினை 16-ம் தேதிக்குள் முடித்து, வேளாண் பெருமக்களுக்கு இடுபொருள் மானியம் வழங்கிட உரிய முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளேன்.
சேதமடைந்த 153.34 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக சீர் செய்யப்பட்ட நிலையில் அவற்றை முழுமையாக சீரமைக்கவும், சேதமடைந்த 185 சிறுபாலங்கள், 115 மின் கம்பங்கள், 3.5 கி.மீ நீளமுள்ள மின் கம்பிகள் மற்றும் 6 மின் மாற்றிகள் ஆகியவற்றை உடனடியாக மறுசீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட 55 இடங்களில், 31 இடங்கள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவழிப்போக்குவரத்திற்கு ஏதுவாக சீரமைக்கப்பட்ட 24 சாலைகளில், இருவழிப் போக்குவரத்திற்கு ஏற்ப சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேதமடைந்த உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க தேவைப்படும் நிதி தொடர்பான முன்மொழிவுகளை விரைந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக ரூபாய் முப்பது கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
04 Mar 2026தங்கம் விலை நேற்று 2-வது நாளாக குறைந்து விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600-க்கு விற்பனையானது.
-
அய்யா வைகுண்டர் 194-வது அவதார நாள்: தமிழ்நாடு கவர்னர் ரவி வாழ்த்து
04 Mar 2026சென்னை, அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
04 Mar 2026சென்னை, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
-
மடப்புரம் காவலாளி கொலை வழக்கு: மாவட்ட நீதிமன்றத்தில் நிகிதா ஆஜர்
04 Mar 2026மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக, நகை காணாமல் போனதாகப் புகாரளித்த புகார்தாரரான நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்த
-
தஞ்சை கூட்டத்தில் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்
04 Mar 2026தஞ்சை, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
தஞ்சையில் விஜய்யை பார்க்க ஆர்வம்: சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
04 Mar 2026தஞ்சாவூர், த.வெ.க. மாநாட்டில் விஜய்யை பார்க்க வந்தவர்களில் 5 பேர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
-
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
04 Mar 2026சென்னை, மாநிலங்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து
04 Mar 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று தி.மு.க.
-
மிக நீண்ட போருக்கு தயார்: ஈரான்
04 Mar 2026தெஹ்ரான், நாங்கள் மிக நீண்ட போருக்குத் தயாராகிவிட்டோம் என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
நெல்லையில் இன்று அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
04 Mar 2026நெல்லை, நெல்லையில் இன்று நடக்கும் அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
-
ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி
04 Mar 2026தஞ்சாவூர், ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
-
சிவகங்கை தொழிற்பேட்டையில் அமைக்கிறது எம்.ஆர்.எப்.-ன் ரூ.5,300 கோடி மதிப்பிலான புதிய டயர் தொழிற்சாலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
04 Mar 2026சென்னை, தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலை அமைப்பதற்கு, அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கொல்லப்படுவார்: இஸ்ரேல் எச்சரிக்கையால் பரபரப்பு
04 Mar 2026ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமேனியின் மகன் மோஜ்தபா கமேனியும் கொல்லப்படுவார் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் பலியான கமேனியின் உடல் சொந்த ஊரான மஷ்ஷாத்தில் விரைவில் அடக்கம்
04 Mar 2026தெஹ்ரான், ஈரானின் உச்சத் தலைவர் மதகுரு அயத்துல்லா அலி கமேனி உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை போட்டி
04 Mar 2026சென்னை, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.
-
த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம்: தஞ்சை கூட்டத்தில் விஜய் ஆவேசம்
04 Mar 2026தஞ்சை, தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம் என்று தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.
-
போர் பதற்றம் எதிரொலி: 3 - வது நாளாக கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை
04 Mar 2026மும்பை, போர் பதற்றம் காரணமாக நேற்று 3-வது நாளாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.
-
நாங்குநேரி இரட்டைக்கொலை; காவல்துறை விசாரணை தீவிரம்: இதுவரை 7 பேர் கைது
04 Mar 2026திருநெல்வேலி, நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.
-
ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவ மறுப்பு: ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை துண்டித்த டொனால்ட் ட்ரம்ப்
04 Mar 2026நியூயார்க், ஈரான் மீது தாக்குதல் நடத்த உதவ மறுத்த ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை தூண்டிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தி பெயரை அகற்ற ஒப்புதல்
04 Mar 2026திருச்சி, திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் எழுந்த நிலையில், பெயரை மாற்ற ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.&nb
-
ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Mar 2026சென்னை, ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை மாணவியின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர்
04 Mar 2026சென்னை, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் கிராமம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்க
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Mar 2026- கோவை கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
- ஆழ்வார ்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
- காரமடை அரங்கநாதர் சாற்றுமுறை
- காங்கேயம் முருகன் விடயாற்று உற்சவம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Mar 2026


