முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சார கம்பம் தானாக விழுந்ததால் வாலிபர் உயிரிழக்கவில்லை: அமைச்சர் தங்கமணி விளக்கம்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

மின்சார கம்பம் விழுந்ததால் சென்னையில் வாலிபர் உயிரிழக்கவில்லை. லாரி மோதி மின்கமபம் விழுந்ததால் இறந்தார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். 

சென்னையில் மின்துறை அமைச்சர் பி. தங்கமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்: அப்போது அவர் கூறியதாவது:-

பொதுவாக மின்சார வாரியத்தில் புகார்கள் எங்கே வந்தாலும், அந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் அங்கே சென்று, பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி விடுகிறார்கள். பொதுவாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் தெரிவிப்பார்கள். அல்லது எனக்கு தகவல் தெரிவிப்பார்கள். அல்லது என்னுடைய வீட்டில் 24 மணி நேரமும் புகார் செய்வார்கள். வந்த அனைத்து புகார்களையும் எடுத்து பார்த்தோம். குறிப்பிட்ட மின்கம்பம் பழுதடைந்தாக, எந்த இடத்திலும் பதிவு ஆகவில்லை. அங்கு விழுந்த கம்பமும், சேதாரம் இல்லாமல் நன்றாக தான் உள்ளது. அந்த கம்பம் கடைசி கம்பமாக இருக்கும் காரணத்தினால் லாரி பட்டுதான் விழுந்திருக்கும் என்பது தான் யூகம். தற்போது காவல்துறையிடம் கண்காணிப்பு கேமரா வைத்து அது எந்த லாரி என்பதை கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். கண்டுபிடித்தவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி இருந்தாலும் சேதுராஜ் இறந்தது வருந்தத்தக்க ஒன்றுதான். மழைக் காலம் வரும் காலம் என்பதால் மின்வாரியத்தில் தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். மின் கம்பிகள் தாழ்வாக இருந்தாலோ, மின்கம்பிகள் பழுதடைந்திருந்தலோ அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இன்றும் ( நேற்று) அது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை வைத்துள்ளோம். 15-ம் தேதி நடைபெற்ற விபத்து என்பது, அனைத்து பத்திரிகைகளும் மின்சார வாரியத்தின் மூலம் நடைபெற்றது என்று செய்தியை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. மின்சார வாரியமாக இருந்தாலும், மாநகராட்சியாக இருந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பு. இதற்கு மாற்று கருத்து இல்லை. மின்சார வாரியத்தை பொறுத்தவரை இது போன்ற புகார்கள் எங்கே வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலமைச்சரும் மழைக்காலம் என்பதால் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, விபத்துக்கள் வாராமல் தடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

அந்த அடிப்படையில் நாங்களும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாநகராட்சியை பொறுத்தவரை, புதைவட கேபிள்கள் அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு தெரியாமல் மாநகராட்சியோ, வடிகால் வாரியமோ, பி.எஸ்.என்.எல். போன்றவைகள் எங்களுக்கு தெரியாமல், சாலையை தோண்டுவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. எங்காவது கேபிள் புதைக்க வேண்டும்என்றால் எங்களிடம் கேளுங்கள். நாங்கள் எங்கள் கேபிள் எங்கு இருக்கிறது என்று தெரிவிக்கிறோம் என்று நாங்களும் அவர்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். தகவல் தெரியாமல் நடக்கும் போதுதான் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். பொதுவாக மின்கம்பங்கள் பழுதடைந்தது என்றால், 14 மாதத்தில் கிட்டதட்ட, 62 ஆயிரத்து 688 மின்கம்பங்களை நாங்கள் மாற்றியுள்ளோம். புகாரின் அடிப்படையில், இன்றும் 2 ஆயிரத்து 238 மின்கம்பங்கள் மாற்ற வேண்டியுள்ளது. அதுவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. எ

ங்காவது மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது என்றால், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கும், எனக்கோ, இங்கு இருக்கும் அதிகாரிகளுக்கோ, தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இருந்த போதிலும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, 10 அல்லது 15 நாட்களுக்குள் எங்கே, எங்கே பழுதடைந்துள்ளதோ, அதனை சரி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கிள்ளோம். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். அனுமதி பெறாமல் தோண்டும் நிறுவனங்கள் மீது பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். விதிமீறல் செய்வோர்களுக்கு  அடிப்படையில் வசூல் செய்துள்ளோம். சம்பந்தபட்ட இடத்தில் இருந்த மின்கம்பம் நன்றாக உள்ளது. தரமுள்ள  மின்கம்பங்களைதான் உபயோகப்படுத்துகிறோம். தரம் இல்லை என்று நிருபித்தால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். மின்கம்பங்களை ஒரு முறைக்கு மூன்று முறை ஆய்வு செய்கிறோம். பொதுமக்கள் பல்வேறு புகார்களை எனக்கு தெரிவிக்கின்றார்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். பொதுமக்கள் இதற்கு தொடர்ந்து எனக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 1912 என்ற எண் .24 மணி நேரம் இந்த எண் செயல்பாட்டில் இருக்கும்  ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார் குறித்து தெரிவிக்க குழு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து