முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.ஐ.பி. தரிசன திட்டத்தில் திருப்பதியில் 10 நாட்களில் 533 பக்தர்கள் தரிசனம்

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த 10 நாட்களில் 533 நன்கொடையாளர்கள் நன்கொடை அளித்துள்ளனர். 

திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் இந்து சனாதன தர்மத்தை பரப்ப ஏழுமலையான் கோவில் கட்ட திட்டமிட்டது. அதற்காக ஸ்ரீவாணி (வெங்கடேஸ்வரா கோவில் நிர்மாணம்) அறக்கட்டளையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பக்தர்களிடையே அறிமுகப்படுத்த இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்தது.

இதையொட்டி கடந்த 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையான 10 நாளில் 533 நன்கொடையாளர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.பக்தர்களின் ஆதரவு பெருகியுள்ளதால் தற்போது ஆப்லைனில் வழங்கப்பட்டு வரும் இந்த நன்கொடை சேவை இந்த மாதம் முதல் இணையதளம் மூலம் வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் தரிசன டிக்கெட் மட்டுமல்லாமல் பக்தர்கள் வாடகை அறைகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் 60 வயது நிரம்பிய பின்னரும் அயலாக்கப்பணி மற்றும் ஒப்பந்த ஊழியர்களாக பலர் பணியாற்றி வருகின்றனர். தற்போது படித்து முடித்து வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு, ஓய்வுபெற்ற பின்னும் தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை   வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்று ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டது.

அதில் தேவஸ்தான பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை உடனடியாக பணியை விட்டு அனுப்ப வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து