முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதமா? கவர்னர் மாளிகை விளக்கம்

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      தமிழகம்
Rajbhavan

சென்னை, மசோதாக்களுக்கு ஒப்புதல் தர என்பது தவறு என்று கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்டோபர் 14 முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. அதன்படி இந்த சட்டசபையில் கூட்டத்தொடரில் மொத்தம் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில் நிறைவேற்றப்பட்ட 16 சட்ட மசோதாக்களில் ஒன்பது மசோதாக்களுக்கு சமீபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்தநிலையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தாமதப்படுத்துவதாக தமிழக அரசு குற்றம்சாட்டும் நிலையில் கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி தமிழ்நாடு கவர்னர் செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னர் தாமதம் செய்வதாக கூறுவது ஆதாரமற்றது. கவர்னரின் நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவை என்பது உண்மைக்கு புறம்பானது.

நேர்மை, வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்புடன் அரசியலமைப்பு கடமைகளை செய்து வருகிறார் கவர்னர். 2025 அக்டோபர் 31 வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81 சதவீதத்திற்கு கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். 13 சதவீதம் மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மசோதாக்கள் அக்டோபர் 2025-ம் ஆண்டு கடைசி வாரத்தில் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து