ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி மழையால் பாதியில் ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2019      விளையாட்டு
Aus-Pak t20 cancel 2019 11 03

சிட்னியில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் மழையால் முடிவு எட்டப்படாமல் போனது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பகர் சமான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். போட்டிக்கு இடையே மழை பெய்ததால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாம் 38 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க், ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 15 ஓவரில் 119 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஆரோன் பிஞ்ச் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா 3.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. அதன்பின் போட்டி நடைபெற சாத்தியம் இல்லாததால் கைவிடப்பட்டது. ஆரோன் பிஞ்ச் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்திருந்தார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து