முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 184 குறைந்தது

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ. 29,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 23 குறைந்து ரூ.3,635-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ரூ.3,798 ஆக இருந்தது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,568 ரூபாயிலிருந்து 30,384 ரூபாயாகக் குறைந்தது.  அதேபோல், வெள்ளியின் விலை 1.40 காசுகள் குறைந்து ஒரு கிராமுக்கு ரூபாய் 47.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வந்ததன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று குறைந்ததால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து