நிலக்கோட்டையில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை அ.தி.மு.க . நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      திண்டுக்கல்
13  btl admk

நிலக்கோட்டை ,- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , நிலக்கோட்டை அ.தி.மு.க .ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  தேர்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அம்மையநாயக்கனூர் பேரூர் கழகச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூர் கழகச் செயலாளர் சேகர், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
        கூட்டத்தில் கலந்து கொண்டு நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் சிறப்புரையாற்றி பேசியதாவது: தற்போது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் அதிமுகவினர் வெற்றி பெற வேண்டும். அதற்காக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உடனடியாக விருப்ப மனுவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
       தற்போது உள்
ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெற அ.தி.மு.க கட்சித் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்..
  இக்கூட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் நல்லதம்பி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியன்,முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனிவாசன், அம்மையநாயக்கனூர் பேரூர் கழக பொறுப்பாளர் காசி பாண்டி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார்,நிலக்கோட்டை பேரூர் கழக நிர்வாகி பந்தா முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து