முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல்: இன்று முதல் தே.மு.தி.க. விருப்ப மனு பெறலாம் - விஜயகாந்த் அறிவிப்பு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் விருப்பமனு பெறலாம் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்  விரைவில் நடைபெற உள்ளது. ஆனால்  இன்னும் தேர்தலுக்கான தேதி அறிவிக்கபடவில்லை.இருப்பினும் அனைத்து கட்சிகளும்  உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகளை தொடங்கி விட்டன.  அனைத்து கட்சிகளும் விருப்ப மனுக்களை விநியோகம் செய்து வருகின்றன . அதன்படி  தேசிய முற்போக்கு  திராவிட கழக   பொதுச்செயலாளர்   விஜயகாந்த் விருப்ப மனுக்களை  பெற்று கொள்ளலாம் என அறிவித்து  உள்ளார்.

இன்று முதல்  உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும் , கழக தொண்டர்களும் உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை இன்று 15.11.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இருந்து அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று  விஜயகாந்த் கூறி உள்ளார். அதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 25.11.2019 திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும்  விஜயகாந்த் கூறி உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கும் தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் என்றும் அவர் கூறி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து