முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : உலகளாவிய பொருளாதார சுணக்கத்தால் பல்வேறு நாடுகளிலும் தொழில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருட்கள் விற்பனை குறைவு, வர்த்தகம் வாய்ப்புகள் வீழ்ச்சி என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். இதன் காரணமாக தங்கத்தின் விலை அண்மைக் காலமாக உயர்ந்தது. இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை 2-வது நாளாக நேற்றும் உயர்வடைந்தது. சென்னையில் 8 கிராம் கொண்ட ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 160 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 184 ரூபாய்க்கு விற்பனையானது. கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்து 3648 ரூபாயாக விற்பனையானது. அதே போல 24 கேரட் சுத்தத் தங்கம் ரூ. 30472-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.600 உயர்ந்து ரூ.48500 ஆயிரமாகவும், ஒரு கிராம் 48.50 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து