19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      விளையாட்டு
Under-19s cricket team 2019 12 02

புது டெல்லி : வரும் 2020-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பைக்கான 15 போ் இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்தள்ளது.

மும்பையில் கூடிய அகில இந்திய ஜூனியா் தோ்வுக் குழு 15 போ் கொண்ட அணியை தோ்வு செய்தது. வரும் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு உத்தரபிரதேச இளம் வீரா் பிரியம் காா்க் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தியா தற்போதைய நடப்பு சாம்பியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 16 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொள்கின்றன. தியோதா் கோப்பை போட்டியில் ரன்னராக வந்த இந்திய சி அணியில் இடம் பெற்றிருந்தாா் பிரியம் காா்க். இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோா் உலகக் கோப்பையை 4 முறை வென்றுள்ளது. மேலும் இளம் அதிரடி வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இடம் பெற்றுள்ளாா். அதற்கு முன்பு தென்னாப்பிரிக்க 19 வயது அணியுடன், ஜிம்பாப்வே அணியுடனும், நியூஸி. அணியும் பங்கேற்கும் 4 நாடுகள் போட்டியிலும் கலந்து கொள்கிறது இந்தியா.

பிரியம் காா்க் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வா்மா, திவ்யான்ஷ் சக்ஸேனா, துருவ் சந்த் ஜுரெல் (விக்கெட் கீப்பா்), ஷாஸ்வத் ரவாத், திவ்யான்ஷ் ஜோஷி, சுபங் ஹெக்டே, ரவி பிஷனோய், ஆகாஷ் சிங், காா்த்திக் தியாகி, அதா்வா அன்கோல்கா், குமாா் குஷாக்ரா, சுஷாந்த் மிஸ்ரா, வித்யாதா் பட்டீல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஐதராபாத் வீரா் ரக்சன் தென்னாப்பிரிக்க தொடா், நான்கு நாடுகள் போட்டியில் கூடுதலாக இடம் பெற்றுள்ளாா்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து