முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற சிறுவர் உள்பட 6 அகதிகள் கைது:

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேஸ்வரம்,- தமிழக பகுதிகளில் வசித்து வந்த இலங்கை அகதிகள் கள்ள தோணி மூலம் ராமேசுவரம் தனுஸ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற சிறுவர் உள்பட 6 இலங்கை அகதிகளை நேற்று கியூ பிரிவு போலீஸார் கைது செய்து அகதிகளின் பெயரில் வைத்திருந்த இந்திய ஆதார்,வாக்காளர் அடையாள அட்டை குறித்து  போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   ராமேசுவரம் கடலோரப்பகுதிகளிலிருந்து  இலங்கைக்கு பல வகையான கடத்தல் பொருள்கள் கடத்தி வருவதாக மத்திய,மாநில போலீஸார்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்திருந்தது. அதன் பேரில் நேற்றுக்கு முன் தினம் தனுஸ்கோடி கடல் பகுதிகளில் மர்ம கடத்தல் காரர்களால் விடப்பட்ட பீடி இழை கரை ஒதுங்கியது.அதுபோல தீவுப்பகுதிகளில் மர்ம பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது.இதனையொட்டி ராமேசுவரம் கடல் பகுதி முதல் மண்டபம் கடல் பகுதி வரை மத்திய,மாநில அனைத்து பிரிவு போலீஸார்கள் மற்றும் கடலோரபாதுகாப்பு போலீஸார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தனுஸ்கோடி  கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலையில்  கியூ பிரிவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது  தனுஸ்கோடி அருகே எம்.ஆர் சத்திரம்  பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரனை நடத்தினர்.விசாரனையில்  அவர்கள் திரிகோணமலை மற்றும் யாழ்பாணம் பகுதியை சேர்ந்த இலங்கை அகதிகள் என தெரிய வந்தது.அதன் பின்னர் போலீஸார்கள் 6 பேரையும் கைது செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது  சதீசன் (42), இவரது மனைவி டிலக்சனா(31) இருவரும் யாழ்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும்,இவர்கள் பாஸ்போட் எடுத்து விமானம் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா வந்து சென்னையில் வெளி அகதிகளாக பதிவு செய்து திருவள்ளுவர் மாவட்டம் திருவென்றவூர் என்ற பகுதியில் தங்கி வசித்து வந்துள்ளனர் எனவும்,அதுபோல சுதாகரன் (40), இவரது மனைவி சந்திரமதி(36), மகன் ஹரீஸ்கரன் (10), இவர்கள் மூவரும் இலங்கையிலிருந்து  கடந்த 2013 ஆம் ஆண்டு கள்ள தோணி மூலம் ராமேசுவரம் வந்து பின்னர்  சென்னை உத்தண்டி பகுதியில் வெளி அகதிகளாக வசித்து வந்துள்ளனர் எனவும்,அதுபோல இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த  உதயகுமார் கடந்த 2017 ஆம் ஆண்டு கள்ள தோணி மூலம் ராமேசுவரம் வந்து சென்னையில் வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மூன்று குடும்பத்தை சேர்ந்த  இவர்கள் சென்னையில் சந்தித்து பழகி வசித்து வந்துள்ளனர்.இதனையடுத்து இவர்கள் 6 பேரும் இலங்கைக்கு செல்ல  முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மர்ம ஏஜெண்டு மூலம் மற்றும் இலங்கை யாழ்பாணம் பகுதியை சேர்ந்த கள்ள தோணி ஏஜெண்ட் மூலம் தொடர்பு கொண்டு ராமேசுவரம் பகுதியிலிருந்து அழைத்து செல்ல தலா ரூ,10 ஆயிரம் என  ரூ.60 ஆயிரம் பேசி திங்கள் கிழமை இரவு ராமேசுவரம் பகுதிக்கு வந்ததாகவும்,படகு வந்த நிலையில் அதே நேரத்தில்  போலீஸார் எங்களை பிடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் எங்களை போலீஸார் பிடித்து விசாராணை செய்த நிலையில் இதை பார்த்த படகு ஓட்டி திரும்பி தப்பி சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர்.அதன் பின்னர்  போலீஸார்கள் அகதிகள் கொண்டு வந்த பேக் பைகளை சோதணையிட்டனர்.அப்போது அகதி சதீசன் என்பவர் பெயரில்  மதுரை முகவரியில் இருந்த இந்திய ஆதார் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை,வாகன ஓட்டுனர் உரிமை அடையாள அட்டை, தனியார் வங்கி கணக்கு புக்,அதுபோல அவரது மனைவி பெயரிலிருந்த ஆதார் அட்டை,எஸ்.பி.ஐ. கணக்கு புக்,அதுபோல சுதாகரன் பெயரிலிருந்த இந்திய ஆதார் அடையாள அட்டை,பான் கார்டு ஆகியவைகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.மேலும் இந்திய அகதிகளிடம் இந்திய குடியுரிமை ஆவணங்கள் இருந்ததை பார்த்து மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸார்கள் அதிர்ச்சியடைந்தனர்.   இதனை தொடர்ந்து 6 பேர் மீதும்  போலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து